உங்க அம்மா இன்னும் சாகலையா?? நெட்டிசனின் வன்மமான கேள்விக்கு மாயாவின் தங்கை கொடுத்த பதிலடி.!



bigboss maya sister reply to netizans comment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி துவங்கி 74 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷூ, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் எலிமினேட்டான அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில்   ஒருவராக கலந்து கொண்டவர் மாயா. இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மாயாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் மாயாவின் சகோதரி வெளியிட்ட பதிவிற்கு கீழ் நெட்டிசன் ஒருவர், இன்னுமா உங்க அம்மா சாகாமல் இருக்கிறார் என கமெண்ட் செய்துள்ளார்.

            maya

அதற்கு மாயாவின் சகோதரி, இந்த வன்மம் தேவையா? என் தாயைப் பற்றி பேசும்போது உன்னுடைய தாயை நினைத்து பார்த்தாயா? கெட்டவர்களாக காட்டப்படுபவர்கள் வெளியே நல்லவர்களாக இருக்கலாம். உள்ளே நல்லவர்களாக இருப்பவர்கள் வெளியே கேடுகெட்டவர்களாகவும் இருப்பர். 20 கேமராக்கள் காட்டும் காட்சியில் 20 சதவீதம் மட்டும்தான் உண்மை. இந்த வன்மத்தை போட்டியாளர்களுக்கு ஓட்டு போடுவதில் காண்பியுங்கள் என கூறியுள்ளார்.