மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெற்றியை தொடர்ந்து கவின் இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் முகேன்! ஹீரோயின் யார் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராகி, ஏராளமான ரசிகர்களின் மனதை ரசிகர்களை கொள்ளை கொண்டவர் முகேஷ். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பாடிய சத்தியமா சொல்லுறேன்டி பாடல் பெருமளவில் பிரபலமானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கிய நிலையில் அவர் வெப்பம் பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் வெற்றி 6என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் முகேன் ராவிற்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக முகேன் வேலன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை கவின் மூர்த்தி என்பவர் இயக்குகிறார். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகும் இதில் முகேனுக்கு ஜோடியாக கென்னடி கிளப் படத்தில் நடித்த மீனாக்ஷி நடிக்கிறார். மேலும் அவர்களுடன் பிரபு, சூரி, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் குறித்த பிற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.