ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
எனக்கு அந்த நடிகர் மேலதான் க்ரஷ் இருக்கு! வெளிப்படையாக போட்டுடைத்த பிக்பாஸ் ரித்விகா! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதனை தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் திரைப்படத்தில் நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து அவர் கபாலி, இருமுகன், சிகை என பல படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வென்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்திருந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்திருந்த ரித்விகாவிடம், உங்களுக்கு தமிழ் சினிமாவில் யார் மேலாவது க்ரஷ் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விஜய் சேதுபதி மீது எனக்கு க்ரஷ் உள்ளது. ஜெய்சங்கர் மீதும் கிரஷ் உள்ளது என கூறி சிரித்துள்ளார்.