அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அட.. கூடிக்கிட்டே போகுதே! பிக்பாஸ் கொடுத்த செம சான்ஸ்! இவர்தான் எடுத்துருப்பாரோ! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் தற்போது பாவனி, பிரியங்கா, தாமரை, நிரூப், அமீர், சிபி, ராஜு ஆகியோர் உள்ளனர். இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் பணப்பெட்டி டாஸ்க் கொடுத்துள்ளது. அதாவது பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கும் போட்டியாளர்கள் போட்டியை விட்டு விலகலாம். இந்த நிலையில் முதலில் 3 லட்சத்தில் துவங்கி 5லட்சம் வரை பிக்பாஸ் பணம் கொடுத்துள்ளது. ஆனால் அந்த பணத்தை போட்டியாளர்கள் யாரும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் பிக்பாஸ் 7 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதனையும் போட்டியாளர்கள் யாரும் எடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் அமீர் மட்டும் பணத்தை கையில் எடுத்து பார்க்கிறார். இந்த ப்ரோமோ வெளியான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அமீர் பணத்தை எடுத்து இருப்பாரோ என கமெண்டு செய்து வருகின்றனர்.