மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் பிரபலம் ஷெரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோக நிலைமையா..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். இவர் வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். நீண்ட நாட்களாக திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் ஷெரின் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முதன்முதலில் 'துள்ளுவதோ இளமை' தனுஷ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் ஹிட்டாகி வெற்றியைப் பெற்றது.
இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்து வந்தார். இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஷெரின். இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் தனது காதலைக் குறித்து மனமுடைந்து பேசியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பு தான் இவரது காதலின் காதலருடன் பிரேக்கப் ஆனதாம். அதிலிருந்து மனதை மாற்றவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.