#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. வைகைப்புயல் வடிவேலுவுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்! யாருனு பார்த்தீங்களா.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. பல தடைகளால் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஷிவாங்கி, புகழ், ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாய் சேகர் படத்தில் முதலில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அவர் அப்படத்தில் இருந்து விலகவே அவருக்கு பதிலாக பிக்பாஸ் புகழ் ஷிவானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஷிவானி லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்', பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க, செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் பம்பர் போன்ற படங்களிலும் நடிக்கிறார்.