மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ரியோ கூறிய அந்த வார்த்தையால், கடுப்பாகி சீறிவந்த ரம்யா! திணறிபோன பிக்பாஸ் வீடு! வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் என அதிகமாகிக்கொண்டு, மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.
மேலும் கடந்த வாரம் முதன்முதலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். மேலும் நேற்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் போட்டியாளருக்கு இடையே பல மோதல்களை கிளப்பியது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
#Day18 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/n2KZQCgkU0
— Vijay Television (@vijaytelevision) October 22, 2020
அதில் அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்த நிலையில், ரியோ குரூப்பிஸம் என்ற வார்த்தையை கூற உடனே பொங்கி எழுந்த ரம்யா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் இன்று மீண்டும் மோதல் கிளம்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.