மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த முறை யாரு? இருட்டு அறையில் கண்களை கட்டி, போட்டியாளர்களை கதறவிட்ட பிக்பாஸ்! வைரலாகும் ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது. 24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதனை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் அவர் விலகவே அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடைசி வாரமான தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோரே இருந்த நிலையில், நேற்று இரவு நடந்த எவிக்ஷனில் அபிராமி வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இன்றும் மீண்டும் ஒரு எவிக்ஷன் இருக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று எலிமினேஷனுக்காக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் கண்களைக் கட்டி இருட்டு அறையில் அமர வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் தனிதனியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்பொழுது நிரூப்பிடம் இத்தனை நாட்கள் இருந்த உங்களது அனுபவத்தை கூறுங்கள் என பிக்பாஸ் கேட்டுள்ளார். அதே போல தாமரையிடம் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் செல்கிறீர்கள், எங்களிடமும் சொல்ல மாட்டீர்களா என கேட்கிறார். அப்பொழுது நிரூப் மற்றும் தாமரை ஆகியோர் கதறியுள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இன்று ஜூலி எலிமினேட் ஆகலாம் என கூறப்படுகிறது.
#BBUltimate இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) April 7, 2022
▶ 10 pm Onwards..#Day67 #Promo6 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/gI3ZQR5pG5