திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. இந்த வயசுலேயே இப்படியா? நடிகை வனிதாவின் மகள் வெளியிட்ட பதிவு! செம ஷாக்கில் ரசிகர்கள்!
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் வின்னரானார்.
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 3 மாதங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளானது. பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். ஆனாலும் வனிதா அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை.இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் மீண்டும் காதல், இப்போ சந்தோசமா? என்று உமா ரியாஸ் என்ற கணக்கை டேக் செய்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் வனிதா மீண்டும் காதலில் விழுந்துள்ளாரா என சந்தேகம் கொண்டு விமர்சித்தனர்.
இதற்கிடையில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவாகரத்து பரவாயில்லை, பிரேக் அப் பரவாயில்லை, அதிலிருந்து கடந்து வருவதும் பரவாயில்லை. புதிதாக துவங்குவதும் பரவாயில்லை.ஆனால், ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்தால் நீங்கள் மதிக்கப்படாமல் போய்விடுவீர்கள் என்ற பதிவை பகிர்ந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் இந்த வயசிலேயே இப்படி ஒரு மெசூரிட்டியா? வனிதாவின் மகளாச்சே என ஆச்சரியம் அடைந்தனர்.