மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இது தெரியுமா உங்களுக்கு.! பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன் விஜய் டிவியில் இந்த தொடரில் நடித்துள்ளாரா?? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே சண்டை, மோதலுக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
பிக்பாஸ் 6வது சீசனில் ஜிபி முத்து, அசீம், அசல் கோலார், ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஆயிஷா, மணிகண்டன், ரக்ஷிதா, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், நடன இயக்குனர் சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவா, தனலட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக, பத்திரிக்கையாளராக நுழைந்துள்ளவர் விக்ரமன். இவர் சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ளாராம். அதாவது அவர் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் நாயகனாக நடித்துள்ளாராம். அந்த தொடர் மொத்தம் 30 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.