மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIn : பிக்பாஸ் 7 எப்போது..?! தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்.!
பிக்பாஸ் 7-வது எபிசோட் தொடங்குவதற்கான தேதியை புரோமோவுடன் விஜய் டிவி அறிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் 100 நாட்கள் கணக்கில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் நடக்கின்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6 சீசன்களை கடந்து வெற்றிகரமாக 7-வது சீசன் வரை வந்துள்ளது. சமீபத்தில், 7-வது சீசனுக்கான அறிவிப்புடன் கமல்ஹாசன் ப்ரோமோவில் இடம்பெற்றார். அதில், இரண்டு வீடுகள் என்று அவர் தெரிவித்து இருந்தார். இரண்டு வீடுகள் எனும் பட்சத்தில் போட்டியாளர்கள் வழக்கம் போல அல்லாமல் டபுளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் 7 ப்ரோமோ வீடியோ வெளியாகி அதில் அக்டோபர் ஒன்றாம் தேதி நிகழ்ச்சி துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.