திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது? சின்னவயசுல எப்படி இருந்துருக்கார் பாருங்க! புகைப்படம் இதோ!
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தனது முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுதந்தது. அதனை அடுத்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நடிகை யாஷிகாவுடன் இணைந்து ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருந்த இவர் அதன்பின்னர் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் யாஷிகாவுடன் தனது நட்பை தொடர்ந்துவரும் ஐஸ்வர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
தனது சிறுவயது புகைப்பட தொகுப்பில் இருந்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.