மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏழை தாயின் மகன்! பெற்றோர் குடிப்பதாக கூறிய பிக்பாஸ் பாலாஜி மதுவில் குளிக்கும் சர்ச்சை வீடியோ!
பிக்பாஸ் பாலா மதுவில் குளிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 கடந்த வாரம் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் விளையாடிவருகின்றனர். அந்த 16 பேரில் பாலா என்ற பாலாஜி முருகதாசும் ஒருவர். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் தனது கடந்த கால கஷ்டங்களை கூறி கண்ணீர் சிந்தினார்.
பாலாவின் கண்ணீரை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வருத்தப்பட்டனர். தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் எனவும், தனது தந்தை குடித்துவிட்டு நள்ளிரவில் கூட தன்னை அடித்துள்ளதாகவும், குழந்தை பெற்று சரியாக வழக்க முடியவில்லை என்றால், நீங்கலாம் ஏன் குழந்தை பெத்துக்குறீங்க என பாலா மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் குடிக்கு எதிராக பாலாஜி பேசியதுபோல் தோன்றியநிலையில், தற்போது அதற்கு நேர் எதிராக அவரே மதுவில் குளிக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
"யோக்கியன் #BalajiMurugaDoss ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ல
ச்சா ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம்" என அந்த வீடியோவை பகிர்ந்த நபர் ஒருவர் அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
யோக்கியன் #BalajiMurugaDoss 😄ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ல 😞
— 𝕽𝖔𝖒𝖆𝖓𝕰𝖒𝖕𝖎𝖗𝖊 (@Positivevibessa) October 11, 2020
ச்சா ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம்😑#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/hzqpHWSrAr