கஞ்சா பழக்கத்தை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்; 11ம் வகுப்பு மாணவர் மீது பள்ளி வளாகத்தில் தாக்குதல்., கொலை முயற்சி.! 



Kanyakumari School Student Murder Attempt 

முன்விரோதத்தால் மாணவர் கொலை செய்யப்பட முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு பயின்று வரும் 17 வயதுடைய மாணவர் அடிட் டிட்ஜில்.  

இவர் தனது பள்ளியில் மாணவர்கள் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் பயன்படுத்தி வருவது குறித்து பள்ளியின் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: போலி படிப்பு சான்றிதழ் தயாரித்து ஹைடெக் விபச்சாரம்; குமரியில் அதிரடி காட்டிய போலீஸ்.! 

இதன்பேரில் ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி 5 பேர் கொண்ட மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். 

kanyakumari

இதுதொடர்பான முன்விரோதம் காரணமாக, நேற்று பொதுத்தேர்வுக்கு நுழைவுசீட்டு வாங்க வந்த மாணவர் அடிட் மீது கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதனால் படுகாயமடைந்த சிறுவன் பத்மநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் கார் மீது மோதி சோகம்; இருசக்கர வாகன ஓட்டி பலி.!