மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயதுக்கு வந்த மகள்..! 19 வயதில் மகன்..! 39 வயதில் மூன்றாவது திருமணம் செய்யும் நடிகை பிக்பாஸ் வனிதா..! மாப்பிளை யார் தெரியுமா.?
நடிகை வனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த தகவல் உண்மைதான் என உறுதி படுத்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.
ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து பலவருடங்கள் சிங்கிளாக இருந்துவந்த வனிதா தற்போது மூன்றுவது திருமத்திற்கு தயாராகிவருகிறார். இதுகுறித்த விளக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் வனிதா.
அதில், வரும் ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளேன். கொரனோ ஊரடங்கு காரணமாக நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற உள்ளது.
பீட்டர் பால் மிகவும் எளிமையான, அன்பான மனிதர். இவர் ஒரு விஷுவல் எஃபெக்ட் டைரக்டர். ஏராளமான பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது பெரிய புராஜக்ட் ஒன்றில் பணிபுரிகிறார். அதில் நானும் இருக்கிறேன். அதன் மூலமே எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. எனது யூடியூப் சேனல் ஆரம்பிக்க அவர் எனக்கு பெரியளவில் உதவி செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.