பிக் பாஸ் மூன்றாவது சீசன் தொகுப்பாளர் இவர்தான்? வெளியே கசிந்த தகவல்! யார் தெரியுமா?



Bigg boss kamalakasn is the host for season three

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அதில் ஒன்றுதான் பிக் பாஸ். இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையால் விரைவில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

100 நாட்கள் பூட்டிய வீட்டிற்குள் தொலைக்காட்சி, தொலைபேசி என எந்த ஒரு பொழுதுபோக்கும் இல்லாமல், வெளியுலக தொடர்பு இல்லாமல் போட்டியாளர்கள் வாழவேண்டும். கடைசி வரை உள்ளே இருக்கும் நபர்களில் இருந்து ஒருவர் தேர்வுசெய்யப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதல் சீசனில் நடிகர் ஆரவ் இரண்டாவது சீசனில் ரித்விகா பிக் பாஸ் பட்டத்தை வென்றனர்.

Bigg boss

இந்த இரண்டு சீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் மூன்றாவது சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவிட்டாலும் கமல்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Bigg boss