மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவன் ரொம்ப அதிர்ஷ்டசாலி! கையில் மகனுடன் நெகிழும் சென்ட்ராயன்! இதுதான் காரணமா?
நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன். பொல்லாதவன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து செண்ட்ராயனும் தமிழ் சினிமாவில் பிரபலமானார். பொல்லதவன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சென்ட்ராயன்.
இந்நிலையில் சென்ட்ராயன் பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயம் அவரை பார்க்க அவரது மனைவி அங்கு வந்தார். அங்கு வந்த அவரது மனைவி தான் கற்பகாம இருப்பதாக செண்ட்ராயனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அந்த செய்தியை கேட்ட சென்றாயன் நான் அப்பா ஆக போறேண்டா என சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு செண்ட்ராயனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனக்கு குழந்தை பிறந்த சந்தோசத்தை பகிர்ந்துள்ளார் சென்றாயன். மருத்துவமனை உள்ளே கூடி சென்றதும் பதற்றமாக இருந்தது, சிறிது நேரத்தில் உங்களுக்கு பய்யன் பிறந்துள்ளன என கூறியதும் இந்த உலகமே எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் அவன்னு தோணுச்சு.
நான் பிறந்தப்போ எங்க ஊர்ல சிலருக்கு மட்டும்தான் தெரியும். என் பையன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுறாங்க. அவன் ரொம்பவே அதிர்ஷ்டசாலி. தாயும், சேயும் நலமா இருக்காங்க. பிரார்த்தனைக்கும் நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.