ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக் பாஸ் புகழ் செண்ட்ராயனுக்கு குழந்தை பிறந்திருச்சு! என்ன குழந்தை தெரியுமா?
நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன். பொல்லாதவன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து செண்ட்ராயனும் தமிழ் சினிமாவில் பிரபலமானார். பொல்லதவன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சென்ட்ராயன்.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ரௌத்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சென்ட்ராயன். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ள செண்ட்ராயனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி, மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சென்ட்ராயன்.
இந்நிலையில் சென்ட்ராயன் பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயம் அவரை பார்க்க அவரது மனைவி அங்கு வந்தார். அங்கு வந்த அவரது மனைவி தான் கற்பகாம இருப்பதாக செண்ட்ராயனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அந்த செய்தியை கேட்ட சென்றாயன் நான் அப்பா ஆக போறேண்டா என சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.
இந்நிலையில் நடிகர் சென்ட்ராயன் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.