மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது கிடைக்கவே இல்லை! புலம்பி வந்த சேரனுக்கு இறுதியில் அது கிடைத்துவிட்டது. என்ன தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில் பிக் பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்ல போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் பிரபல தமிழ் இயக்குனர் சேரன். சேரன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சேரனுக்காக பல்வேறு இயக்குனர்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அவரை எப்படியாவது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அழைத்து வரவேண்டும் என இயக்குனர் அமீர் கூறியிருந்தார்.
மேலும் தான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்து தான் செய்யும் எந்த டாஸ்க்கிற்கும் பாராட்டு கிடைக்க வில்லை என சேரன் புலம்பி வந்தார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்கில் சேரன் மிக சிறப்பாக விளையாடியதாக மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்தனர்.
இதன் மூலம் தனக்கு பாராட்டு கிடைக்கவில்லை என புலம்பி வந்த சேரனுக்கு கடைசியாக இந்த டாஸ்மாக் மூலம் பாராட்டு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.