மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் மேடையில் மிகப்பெரிய ரகசியத்தை கூறிய சேரன்! கைதட்டி வரவேற்ற ரசிகர்கள்.
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் படத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில் கவின் - லாஷ்லியாவின் காதல் கதை. தர்ஷன் - ஷெரின் மறுபக்கம் என காதல் இல்லமாக மாறிவருகிறது பிக்பாஸ் இல்லம். இதில் சேரன் - லாஷ்லியாவின் அப்பா - மகள் பாச போராட்டம் வேறு தனி ட்ராக்கில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களை பார்க்க கமல் வந்திருந்தார்.
இதில் பார்வையாளர் ஒருவர் இயக்குனர் சேரனிடம் நீங்கள் வெளியே வந்ததும் உங்கள் சினிமா பயணம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சேரன், தான் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே அடுத்தபடம் பற்றி பேசிமுடித்துவிட்டுத்தான் வந்ததாகவும், விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப்போவதாகவும், படத்தின் வேலைகள் வரும் ஜனவரி முதல் ஆரம்பமாகும் எனவும் சேரன் கூறினார்.
சேரன் - விஜய் சேதுபதி காம்பினேஷனில் உருவாகும் படம் குறித்த தகவலை அறிந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.