மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொண்ணுக்கு மாப்பிளை வேண்டுமாம்..! புகைப்படம் வெளியிட்டு மாப்பிள்ளை தேடும் நடிகை.. வைரல் போட்டோஷூட்..
நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தை அடுத்து, இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடிங்க தொடங்கினார்.
பின்னர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட இவர், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பயங்கர குண்டாக இருந்த அவர் நிகழ்ச்சி முடியும்போது தனது உடல் எடையை பயங்கரமாக குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.
அதில் இருந்து எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் இவர், சமீபத்தில் மண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே?’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் நான் இருக்கிறேன்.. நான் இருக்கிறேன்.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சிலர், பொண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என்று கேள்வியும் கேட்டு வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.