மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டின் பாத் ரூம் ஓரமா ஷிவானி மற்றும் பாலாஜி அடித்த கூத்து – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான நான்காவது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் நான்கு மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் முதல் நடிகை ரேக்கா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் பாடகர் ஆஜித் வெளியேற இருந்த நிலையில் அவர் தன்னிடம் இருந்த எவிக்சன் ப்ரீ பாஸை வைத்து தப்பித்தார்.
இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் சேர்த்து தற்போது 16 பேர் இந்த நிகழ்ச்சியில் விளையாடிவருகின்றனர். வழக்கமாக கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனிலும் அழுகை, சோகம், சண்டை, சமாதானம் என போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அதேபோல் இந்த சீசனில் தற்போதுதான் ஷிவானி, பாலாஜி இடையே காதல் ட்ராக் தொடங்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் அரசால் புரசலாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஃபேஷன் ஷோ நடைபெற இருக்கிறது. அதற்கான ஒத்திகையின்போது ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் பிக் பாஸ் வீட்டின் கழிவறை அருகே நடனமாடி ஒத்திகை பார்க்கின்றனர். பின்னர் இருவரும் மேடையில் நடனமாடும் வீடியோ காட்சியும் ஸ்பெஷல் ப்ரோமோவாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.