மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவர்தான்! மறைமுகமா தெரிவித்த கமல்.! வைரலாகும் புரோமோ!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு வாரங்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் மிகவும் காரசாரமாக உள்ளது. அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தியின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் வாரத்தின் இறுதியில் நடிகர் கமல் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இன்று போட்டியாளர்களை சந்திக்கும் கமல் வீட்டில் இருக்கும் குரூப்பிசம் பற்றி ப்ரோமோ வீடியோவில் பேசியுள்ளார். மேலும் பலரின் முகத்திரை தற்போது விலகிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், சேர, சோழ, பாண்டியர்களாக என போட்டியாளர்களை பிரித்தால் பாண்டியர்களாக ரேகா மற்றும் சனம் செட்டி தான் இடம் பெறுவார்கள். ஏனெனில் அவர்கள்தான் மீன் கொடிய அப்படி தூக்கி பிடிக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும் பாண்டியன் கொடியில் இரண்டு மீன். இவர்களும் இருவர். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியுதா? என கேள்வியுடன் இந்த புரோமோவை முடிக்கிறார் கமல்.
ஏற்கனவே சனம் அல்லது ரேக்கா இருவரில் ஒருவர்தான் இந்தவாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறப்பட்டுவந்தநிலையில் இவர்கள் இருவரும் குறித்து கமல் சூசகமாக பேசியிருப்பது அதனை உறுதி செய்துள்ளது. இதனால் இவர்கள் இருவரில் ஒருவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.