#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியே கசிந்த தகவல்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் இவர்தான்.. யார் தெரியுமா?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியற இருப்பது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் நான்கு ஒருவழியாக இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 போட்டியாளர்கள், வைல்ட் கார்ட் என்ட்ரி என 18 போட்டியாளர்கள் விளையாடிய இந்த போட்டியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார், யாரெல்லாம் இறுதி போட்டிக்கு சென்று அதில் யார் பிக்பாஸ் சீசன் 4 பட்டத்தை வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறாரகள். இவர்களில் இருந்து ஷிவானி அல்லது ஆஜித் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒருவேளை இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் வெளியேற்றப்படலாம் எனவும், ஆனால் இந்த வாரம் டபுள் எவிக்சனுக்கு வாய்ப்பு குறைவு என்றும், ஆஜித்துதான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் எனவும் தகவல்கள் வந்துள்ளது.