மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்! அப்படி என்னதான் இருக்கு? இதோ!
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். படம் வித்தியாசமான கதைக்களமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. படத்தின் வெற்றியின் மூலம் மேலும் பிரபலமானார் யாஷிகா. இதன் விளைவாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினாலும் அதன்பின்னர் அதில் இருந்து மீண்டு தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யாஷிகா.
இந்நிலையில் தனது ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள யாஷிகா தற்போது விநாயகர் சிலை முன்பு மிக மோசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடவுள் முன்பு இப்படியா போஸ் கொடுப்பது என கமெண்ட் செய்து வளர்க்கின்றனர். இதோ அந்த புகைப்படம்.