மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஷிதாவிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி.. கமல்ஹாசனையே கடுப்பில் முகம் சுளிக்கவைத்த ராபர்ட் மாஸ்டர்.. வைரலாகும் இந்த வார ப்ரோமோ..!!
தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 6-வது சீசன் ஆரவாரமாக தொடங்கிய நிலையில், 28 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸின் நவம்பர் 6-க்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு, ஒரு நிரூபர் பிரபலமானவரை பேட்டி எடுப்பது போன்று எடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கிறார்.
அப்போது அசீம், தனலட்சுமி நோக்கி உங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டதா? என்பது போன்ற கேள்வியை எழுப்புகிறார். ராம் நீங்கள் கோபம் வந்தால் எதையும் தூக்கி போட்டு உடைப்பீர்களா? என்று ஜனனியை நோக்கி கேள்வி எழுப்புகிறார். சிவின் கணேசன், ஆயிஷாவை நோக்கி நாங்கள் வந்தபோது பார்த்த ஆயிஷா வேறுமாதிரி இருந்தார்? என்று கேள்வி எழுப்பவே, ஆயிஷாவோ என்னால் முடியவில்லை என்றும், நான் தோற்று விட்டேன் என்றும் கூறுகிறார்.
இறுதியாக ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை நோக்கி நீங்கள் ராபர்ட் மாஸ்டர் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்ப, அவரும் வெட்கத்தில் சிரிக்க திரைமறைவில் அதனை பார்த்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் ஆத்திரத்தில் முகபாவணையை மாற்றி பசரை அழுத்துகிறார். இது குறித்த ப்ரோமோ வைரலாகியுள்ள நிலையில், இன்று ராபர்ட் மாஸ்டருக்கு கமல்ஹாசன் பயங்கர டோஸ் விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.