திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இனிமே பிக்பாஸ் வீட்ல அந்த மாதிரி விஷயம்லாம் செய்யாதீங்க., ரெட் கார்டு கொடுத்துருவன் - எச்சரிக்கை விடுத்த கமல்..!
தமிழில் சின்னத்திரை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6-வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, செய்து வாசிப்பாளர் ஜனனி, நடன இயக்குனர் ராபர்ட், பாடகர் அசல் கோளாறு, நடிகை மைனா நந்தினி, ஆயிஷா, ரக்ஷிதா, சிவின் கணேசன், விஜே மகாலட்சுமி, விக்ரமன், அசின், ஏ.டி.கே, அமுதவாணன், சாந்தி உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஜி.பி.முத்து போட்டியிலிருந்து தாமாக விலகிக்கொண்டார். அதனை தொடர்ந்து சாந்தி, அசோக் கோளாறு ஆகியோர் எலிமினேஷன் செய்யப்பட்டனர். அத்துடன் ஞாயிற்றுக்கிழமையான இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் உரையாடி வரும் நிலையில், இன்று யார் வீட்டைவிட்டு செல்லப்போகிறார்கள் என்ற கேள்வியில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசன் பலருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "சிலர் டாஸ்க்கிற்கு வேண்டுமென்றே லேட்டாக வருவது, பிற மொழிகளில் பேசுவது, சைகை காண்பிப்பது, எழுதி காண்பிப்பது, ரகசியமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயல்களில் நீங்கள் ஈடுபட்டால் உங்களுக்கு ரெக்கார்ட் கொடுத்து நானே வெளியே அனுப்பிவிடுவேன்" என்று போட்டியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.