#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த இரண்டு நடிகருடன் நடிப்பதெல்லாம் ரொம்ப கஷ்டம் - மேடையில் வெளிப்படையாக பேசிய விஜய்!
பிசில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மேலும் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மேடையில் விஜய் பேசியது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். மேலும் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
விழா மேடையில் விஜய் பேசும் போது ஒரு மீம்ஸ் போட்டு காண்பிக்க பட்டது. அதாவது சில நாட்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆன 'பிரே பார் நேசமணி' காமெடி தான் அது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் சார் என்று தொகுப்பாளினி ரம்யா கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் இந்த சீன் எடுக்கும் போது எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. என்னால் அதை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார். மேலும் வடிவேலு சார் மற்றும் விவேக் சாருடன் நடிப்பதெல்லாம் கஷ்டம் எனவும் கூறியுள்ளார்.