#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கெத்து காட்டும் பிகில் புதிய போஸ்டர்.!! அதிகாரபூர்வ அறிவிப்பால் வெறித்தனமான உற்சாகத்தில் ரசிகர்கள்!!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிங்கப்பெண்ணே பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது. இதனை தொடர்ந்து ஏ. ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் இப்பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதனை தொடர்ந்து பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தீபாவளிக்கு ரிலீஸ் என உறுதிசெய்து, பிகில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
The wait is over and let the games begin Our Thalapathy’s #Bigil produced by Kalpathi S Aghoram will hit screens worldwide this Deepavali @Atlee_dir @actorvijay #Nayanthara @arrahman @Ags_production 🙏🙏🙏 pic.twitter.com/awYe5FAAdo
— Archana Kalpathi (@archanakalpathi) August 28, 2019