மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது! நிஜத்தில் இவரு போலீசா?? பதவி உயர்வு பெற்ற பிகில் பட வில்லன் நடிகர்!! குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு, கார்த்தியின் கொம்பன் மற்றும் தளபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிகில் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர் நடிகர் விஜயன். இவர் நடிகர் மட்டுமல்ல. கேரளா மாநிலத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
மேலும் நடிகர் விஜயன் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஆவார். அவர் இதுவரை இந்திய அணிக்காக 70க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். சில ஆண்டுகள் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த அவர் பின்னர் அதிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக பணியாற்றத் துவங்கினார். மேலும் சினிமாவிலும் களமிறங்கினார்.
இந்த நிலையில் நடிகர் விஜயனுக்கு தற்போது பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதனை கேரள காவல்துறை தனக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளதாக மிகவும் மகிழ்ச்சியுடன் நடிகர் விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.