ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி இருக்குமா, இல்லையா? வந்தது அரசின் இறுதி முடிவு!
அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் – அட்லி இருவரும் "பிகில்" படத்தில் இணைந்துள்ளனர் . இந்தப்படத்தை ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதுடன் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தநிலையில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், நாளை 25 ஆம் தேதி பிகில் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் குஷியுடன் இருந்தனர். இந்தநிலையில் அதிக கட்டண வசூல் புகார் வருவதாக பிகில் படம் உட்பட எந்த படத்திற்கு பண்டிகைக்கால சிறப்பு காட்சி ரத்து என அமைச்சர் கடம்பூர் ராஜு, மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.
சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது.
— Kadambur Raju (@Kadamburrajuofl) October 23, 2019
முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும். #TNGovt
இந்நிலையில், பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில், பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரவேண்டும் எனக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்தநிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை, ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது என உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தால் பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்று சோகத்தில் உள்ளனர்.