மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜாதியும், தமிழ் உணர்வும் - நடிகர் கார்த்திக்கை வறுத்தெடுக்கும் புளூ சட்டை மாறன்.!
கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் 10 நவம்பர் 2023 அன்று திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான பிரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் பிரம்மாண்டமாக இசை வெளியீடு விழாவும் நடைபெற்று முடிந்தது.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், "நான் ஜாதி பார்ப்பது இல்லை. சென்னையில் உள்ள மக்கள் ஜாதி பார்ப்பதில்லை. நான் சென்னைக்காரன். சென்னையில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு ஜாதி குறித்து தெரியாது" என்று பல விஷயங்களை பேசியிருந்தார்.
இதனை விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டு விமர்சித்து இருக்கிறார். அதில், நடிகர் சிவகுமார் தனது மகன்களின் திருமணம் குறித்து பேசிய வீடியோ இடம்பெற்றுள்ளது.
அதேபோல, தமிழா ? தெலுங்கா ? என தொகுப்பாளர் ஆந்திராவில் நடத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் தெலுங்கு என குறிப்பிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ள மாறன், "ஊருக்கு ஒரு வேஷம் என்பது இதுதான். தமிழர்களை சிறுமைப்படுத்துவதில் இதுவும் ஒரு பாணி.
Japan - Tamil movie pressmeet:
— Blue Sattai Maran (@tamiltalkies) November 4, 2023
ரஞ்சித் இயக்கத்தில் நான் நடித்த 'மெட்ராஸ்' ஜாதிப்படமில்லை - பட்டப்பகலில் பொய் சொன்ன கார்த்தி. pic.twitter.com/cTl1h2TeYs
தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் நடித்து இங்கே படங்களை எதற்காக நீங்கள் ரிலீஸ் செய்ய வேண்டும்?. ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிடலாம்" என்று கூறியுள்ளார்.