மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தியேட்டர்களைக் கண்டிக்காமல் ரசிகர்களுக்கு ஏன் அறிவுரை?! ப்ளூ சட்டை மாறன் காட்டம்.!
விஜயின் "லியோ" திரைப்படம் இன்று உலகெங்கிலும் பல மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சி காலை 9 மணிக்கு வெளியிடவேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் எங்களுக்கு அதிகாலை 4மணிக் காட்சி தான் வேண்டும் என்று படக்குழு உறுதியாக இருக்கிறது.
இதற்காக நீதிமன்றத்திற்கும் சென்றது. ஆனால் நீதிமன்றமோ அதிகாலைக் காட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடலாம்..அதற்கு தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளும்படி உத்தரவிட்டது.
ஆனால் தமிழக அரசும் 7 மணிக்கு எல்லாம் வாய்ப்பில்லை என்று கூறி காலை 9 மணிக்காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் ஆர்வத்துடன் டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்த ரசிகர்கள் டிக்கெட்டின் விலை 2000 ரூபாயாக உள்ளது என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ், "அதிக விலை கொடுத்து யாரும் டிக்கெட் வாங்க வேண்டாம்" என்று கூறியிருந்தார். இதற்கு ப்ளூ சட்டை மாறன், " அதிக விலைக்கு தின்பண்டங்களுடன் டிக்கெட், பார்க்கிங் கட்டணம் என்று கொள்ளையடிக்கும் தியேட்டர்காரர்களை கண்டிக்காமல் எங்களுக்கு ஏன் அறிவுரை?" என்று காட்டமாக கூறியுள்ளார்.