மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உருட்டு.. லோகேஷ் கனகராஜை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.! என்ன காரணம்.?
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் முதன் முதலில் 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பின்பு மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'லியோ' படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 'லியோ' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், இப்படம் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லரில் விஜய் பெண்களைக் குறிக்கும் விதத்தில் ஒரு கெட்ட வார்த்தையைப் பேசியிருப்பார். இது இணையத்தில் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் லோகேஷ் கனகராஜ், ஒரு பேட்டியில் "நான்தான் விஜய்யை கட்டாயப்படுத்தி பேச வைத்தேன். இது கதைக்கு தேவையானது என்பதால் இந்த காட்சி அமைக்கப்பட்டது" என்று கூறியிருந்தார்.இதனை தனது ட்விட்டர் பதிவிட்டு உருட்டு என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
உருட்டு.. pic.twitter.com/T6YxkuYvMg
— Blue Sattai Maran (@tamiltalkies) October 8, 2023