மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒரே ஒரு பேய் கான்செப்ட்டை வைத்து பல வருடமாக உருட்டுகிறார்" ராகவா லாரன்ஸை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
கோலிவுட்டில் குரூப் டான்சராக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் ராகவா லாரன்ஸ். அதன்பின்னர் டான்சராக மாறிய இவர், பிறகு அப்படியே சின்ன சின்னக் கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், சில வெற்றிப் படங்களையும் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய காமெடி பேய் படங்களை இயக்கியுள்ளார். தற்போது வாசு இயக்கத்தில் "சந்திரமுகி 2" படத்தில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
செப்டம்பர் 28ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், வினோத் ஆகியோர் கதையை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இது புதிதாக இருக்கிறது. நாமும் அதற்கேற்றபடி மாறவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்வீட்டில், " நீங்கள் குறிப்பிட்ட இயக்குனர்கள் மூவரும் கதைக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று, ஒரேயொரு பேய் கான்செப்ட்டை வைத்து பல வருடமாக உருட்டும் நீங்கள் சொன்னால் சரியாகாத் தான் இருக்கும்" என்று கலாய்த்துள்ளார்.