மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
" ராபரி ஸ்டார் அனிருத்" அனிருத்தை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்.. வைரலாகும் ட்வீட்.!
தனுஷ் நடித்த "3" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்த படத்தில் இவரது "வை திஸ் கொலவெறி" பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. ஆரம்ப காலங்களில் தனுஷ் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான "ஜெயிலர்" திரைப்படத்திற்கும், தற்போது வெளியாகியுள்ள "லியோ" படத்திற்கும் இசை அனிருத் தான். இந்நிலையில், தற்போது லியோ படத்தில் இடம்பெற்றுள்ள "ஆர்டினரி பெர்சன்" பாடல், ஒரு வெப் சீரிஸில் இருந்து காப்பியடித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக அனிருத் இசையமைத்த கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற "எனக்கு கல்யாண வயசு தான்" பாடலும் "feeing me" பாடலின் காப்பி என்று சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், " வெளிநாட்டு இசையைத் திருடி தொடர்ந்து அசிங்கப்பட வேண்டியது.
ஆனா பேரு மட்டும் ராக் ஸ்டார் என்று வைத்திருப்பது. அதற்கு பதில் ராபரி ஸ்டார் என்று வைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் ஒரு பொழப்பு.. கொஞ்ச நாள் முன்ன ஒருத்தன் சொன்னான் அனிருத் இளையராஜாவும், ரஹ்மானும் கலந்த கலவை என்று. ப்ளடி.." என்று அசிங்கப்படுத்தியுள்ளார்.