"எத்தனை டிக்கெட் எடுத்தால் ஷோ போடப்படும் என்று அறிவித்து தொலையவும்! ப்ளூ சட்டை மாறன் விளாசல்!
பெரிய நடிகர்களின் படங்களுக்கு தான் தியேட்டர்கள் கிடைக்கின்றன. நல்ல கதையம்சமுள்ள விருதுகளை வென்ற தரமான படங்களை தியேட்டர்கள் வெளியிடத் தயாராக இல்லை. அப்படியே வெளியிட்டாலும் மக்கள் அதனைப் பார்க்க வருவதில்லை.
இந்நிலையில் சென்னை காசி டாக்கீஸில் "கிடா" படத்திற்கு டிக்கட் எடுக்க இயக்குநரின் நண்பர்கள் நால்வரும், மேலும் சிலரும் சென்றுள்ளனர். ஆனால் 15 பேர் வந்தால் தான் படம் போடமுடியும் என்று தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளனர்.
"15 டிக்கட் நாங்களே எடுத்துக்கொள்கிறோம் என்று கூறியும் படம் போடவில்லை. என் ஆதங்கத்தை எங்கே கொட்டுவது என்று தெரியவில்லை" என்று கிடா படத்தின் இயக்குனர் ரா. கார்த்திக் பதிவிட்டுள்ளார். இது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் காட்டமாக கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, " சினிமா பிரபலங்கள் கூட இதுகுறித்து வாய்திறக்காமல் உள்ளனர்.தரமான சிறிய படங்களை அழிக்க இவர்களே போதும். எத்தனை டிக்கட் வாங்கினால் ஷோ போடப்படும் என்றாவது அறிவித்து தொலையுங்கள்" என்று காட்டமாக கூறியுள்ளார்.