திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்ன பையன் எந்த பிரபல நடிகர் தெரியுமா.?
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் பாபி சிம்ஹா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து வருகிறார்.
தமிழில் முதன் முதலில் 'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படம் பல விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வழியாகவிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், பாபி சிம்ஹாவின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பாபி சிம்ஹா சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்பதை ரசிகர்கள் பார்த்து ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.