மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில்... ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர்.!
தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கையின் கிரிக்கெட் லெஜெண்ட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது
இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து படப்பிடிப்பு துவங்க இருந்த வேலையில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அவர் இந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் .
இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகரான மாதூர் மிட்டல் என்பவர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இருக்கிறது. முத்தையா முரளிதரனின் 800 டெக்ஸ்ட் விக்கெட்டுகளை குறிப்பிடும் வகையில் 800 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது .
இதனை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது . இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தத் திரைப்படத்தில் நாசர் மற்றும் வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.