திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் சிறுவயது புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.!?
பொதுவாக திரைத்துறையில் இருக்கும், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது நடிகர் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தமிழ், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும்.
தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வந்ததையடுத்து ரசிகர்கள் இப்புகைப்படத்தில் யார் இந்த நடிகர் என்ற கமெண்ட் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் இந்த சிறு வயது பையன் என்பது தெரியவந்துள்ளது.
சுஷாந்த் தற்போது மறைந்து விட்டாலும் இவர் நடிப்பில் வெளியான பல பாலிவுட் திரைப்படங்கள் வரை பல மொழி ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
இவ்வாறு சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இது போன்ற நிலையில் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் போது திடீரென தற்கொலை செய்து கொண்ட செய்தி இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து தற்போது இவரது சிறு வயது புகைப்படம் இணையத்தில் பரவி வந்ததை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.