மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி.! அடுக்குமாடி குடியிருப்பின் தீ விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.!?
பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் கமிஷனிற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் சுரேஷ் சந்திரசேகர்.
லஞ்ச வழக்கில் கைதான குற்றவாளியிடம் பரிசு வாங்கியதாக அமலாக்க துறையின் குற்றப்பத்திரிக்கையில் பல பாலிவுட் நடிகர், நடிகைகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் ஜாக்குலின் பெர்னாண்டசும் ஒருவர். இந்த லஞ்ச வழக்கில் டெல்லி பொருளாதார பிரிவு இயக்குனரகம் மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் பலமுறை ஆஜராகியும் உள்ளார்.
இது போன்ற நிலையில், மும்பையில் பாலி ரில் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 15ஆவது மாடியில் ஜாக்குலின் வசித்து வருகிறார். இதனை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு தீ பரவியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து விபத்து பகுதிக்கு சென்று தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணத்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜாக்குலின் தீ விபத்தில் சிக்கியதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், ஜாக்குலின் வசிக்கும் 15 வது மாடியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.