மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொது இடத்தில் இயக்குனரின் செயலால் அதிர்ச்சியான நடிகை.! வைரலாகும் வீடியோ.!
பிரியங்கா சோப்ராவின் உறவினரான மன்னாரா சோப்ரா, ஹிந்தியில் 'ஜித்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அங்கு அவரது படங்கள் வெற்றி பெறாததால் அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் வந்தார். அதன்பின்னர், தொடர்ச்சியாக பல தெலுங்கு படங்களில் நடித்த மன்னாரா, தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உள்ளார்.
இந்நிலையில், தெலுங்கில் ராஜ் தருணுக்கு ஜோடியாக மன்னாரா நடித்த 'தீர்க்கபாதர சாமி' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர் ரவிசங்கர் சவுத்ரி , மன்னாராவின் கன்னத்தில் திடீரென முத்தமிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மன்னாரா, சுற்றி காமிராக்கள் இருந்ததால், சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் அப்போது அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொது இடத்தில் ஒரு இயக்குனர் நடிகையிடம் இப்படி நடந்து கொண்டது தவறு என்று பலரும் கூறி வருகின்றனர்.