மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சின்னத்திரை, குழந்தை நட்சத்திரமான 20 வயது இளம் நடிகை படப்பிடிப்பில் தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர் & ரசிகர்கள்.!
படப்பிடிப்பு தளத்தில் வைத்தே இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக இருப்பவர் துனிஷா சர்மா (வயது 20). இவர் பாலிவுட்டில் உள்ள நடிகைகளில் இளம் நடிகையாவார். பல திரைப்படங்களில் கதாநாயகிகளின் இளம் கதாபாத்திரத்தில் துனிஷா நடித்து வந்துள்ளார்.
ஹிந்தி சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பல சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் சின்னத்திரை தொடர் படப்பிடிப்பில் இருந்தார். இன்று வழக்கம்போல தனது அறையில் குழுவின் அழைப்புக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது, சின்னத்திரை குழுவினர் துனிஷாவை அழைக்க சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு மருத்துவர்களும் துனிஷா ஷர்மாவின் இறப்பை உறுதி செய்தனர்.
இந்த தகவலை அறிந்த அவரின் குடும்பத்தினர் & ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். பல திரையுலக நட்சத்திரங்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரையுலகில் பல நடிகைகள் மரணம் மர்மமாகவே இருந்து வரும் நிலையில், துனிஷா ஷர்மாவின் மரணமும் மர்மத்துடன் நடந்துள்ளது.