ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
என் மனைவிக்கு பிறகு இவர்தான் அழகு.! தயாரிப்பாளர் போனிகபூர் ஓபன் டாக்! யார்னு தெரியுமா??
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் மகாநடி என்ற படத்திலன் மூலம் காலடி பதித்து செம ரீச்சானார்.
தற்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் பேசுகையில், நான் பார்த்ததிலேயே என்னுடைய மனைவிக்கு அடுத்து அழகான பெண்ணாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்தான் என கூறியுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.