வாவ்.. சூப்பர்ல! ரம்ஜான் ஸ்பெஷல்! ரசிகர்களை கவரும் புதிய போஸ்டரை வெளியிட்ட அருண்விஜய்யின் பார்டர் படக்குழு!!



border-movie-team-released-new-poster

தமிழ் சினிமாவில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தல அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகு பெருமளவில் பிரபலமாகி, தற்போது பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவர் இறுதியாக மாபியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அருண் விஜய் கைவசம் தற்போது பாக்சர், அக்னி சிறகுகள், சினம் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மேலும் அவர் ஈரம், வல்லினம், ஆறாது சினம், போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இப்படத்திற்கு சம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படக்குழுவினர்கள் மற்றும் நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பார்டர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில்  அருண் விஜய், ஸ்டெபி பட்டேலுடன் க்யூட்டாக உள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.