மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை! அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி!
"கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேதுராமன். இவர் பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஆவார். இவர் "கண்ண லட்டு தின்ன ஆசய்யா" படத்தின் வெற்றிக்குப் பிறகு, மேலும் சில திரைப்படங்க்ளில் நடித்தார். மருத்துவரான இவருக்கு திரைத்துறையில் பல நண்பர்கள் உண்டு
இந்தநிலையில் இந்த கொரோனா சமயத்தில் திரையுலகம் முதலில் கேட்ட ஒரு சோகச்செய்தி நடிகர் சேதுராமன் மரணம் தான். மார்ச் 26ம் தேதி இவர் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். சந்தானம், சதீஷ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இவருடைய மறைவிற்காக வருத்தம் தெரிவித்தனர்.
Dr #Sethuraman’s wife delivers baby; Arrival of "#KuttySethu” pic.twitter.com/Uroms8xWY9
— Diamond Babu (@idiamondbabu) August 3, 2020
மாரடைப்பால் நடிகரும், மருத்துவரும் ஆன சேதுராமனின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் உயிரிழக்கும் போது அவரது மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். இதனையடுத்து நேற்று அவருக்கு மகன் பிறந்துள்ளார். மறைந்த நடிகர் சேது ராமனே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.