#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டில் யாரும் இல்லை..! வா டா..! 16 வயது சிறுமியை நம்பி பார்க்கச்சென்ற இளைஞர்..! தனிமையில் இருந்தபோது நேர்ந்த பயங்கரம்.!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னான்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கெளதம். கெளதம் பொள்ளாச்சியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்த கெளதம் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அதே பகுதியை சேர்ந்த 16 வயதான இளம்பெண்ணுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கம் நெருக்கமாகி இருவரும் தனிமையில் செல்போனில் பேசிக்கொள்ளும் வரை நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் கௌதமனை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட அந்த இளம் பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை வீட்டிற்கு அழைக்க, கெளதம் அங்கு சென்றுள்ளார்.
இருவரும் தனிமையில் பேசி கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண்ணின் தந்தை, அண்ணன், மாமா ஆகியோர் எதிர்பாராவிதமாக வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டின் வாசலில் ஆண் ஒருவரின் செருப்பு இருப்பதை பார்த்த அவர்கள் சந்தேகத்தின் பேரில் வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர்.
அப்போது கட்டிலுக்கு அடியில்கெளதம் ஒளிந்துருப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை எடுத்து கௌதமை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கெளதம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கெளதம் உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த சிறுமியின் தந்தை, அண்ணன் உட்பட மூன்றுபேர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.