மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'பிரேக்கிங் நியூஸ்' படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை; யார் தெரியுமா?
நடிகர் ஜெய் தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானார். பகவதி படம் சினிமா துறையில் ஜெய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தொடர்ந்து சென்னை 28 படம் மூலம் ஒரு ஹீரோவாக அவதாரம் எடுத்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக உள்ளார்.
இந்நிலையில், ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.
இந்தப் படம் குறித்து நடிகை பானுஸ்ரீ கூறுகையில், “இந்த படத்தில் நான் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம்.
நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன் என்றார்.
நடிகை பானுஸ்ரீ, இந்தப் படத்திற்கு ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், அடுத்ததாக சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.