மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீராத மன உளைச்சல்! மனநலம் பாதிக்கப்பட்ட அக்காவுடன் தம்பி செய்த காரியம்!! தாய் கண்ட அதிர்ச்சி காட்சி!!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மனைவி அலமேலு. இந்த தம்பதியினருக்கு ப்ரீத்தா என்ற 30 வயது மகளும், அருண்குமார் என்ற 25 வயது மகனும் உள்ளனர். ப்ரீத்தா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அருண்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தந்தை பரமேஸ்வரன் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் பல இடங்களிலும் கடன் வாங்கி புதிதாக வீடு கட்டிய அருண்குமார் கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் இதனால் அவரது அக்காவிற்கும் சிகிச்சை செய்ய முடியவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள எண்ணிய அருண்குமார், தான் இல்லை என்றால் தனது அக்காவும் மிகவும் கஷ்டப்படுவார் என எண்ணியுள்ளார். இந்நிலையில் அவர்களது அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் அருண்குமார் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் அவரது அக்காவுடன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் வீடு திரும்பிய அலமேலு இருவரையும் காணாமல் பல இடங்களில் தேடியுள்ளார். பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு தண்ணீர் தொட்டிக்குள் அருண்குமார் மற்றும் ப்ரீத்தா பிணமாக கிடப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அப்பொழுது அருண்குமார் எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. அதில் அவர் கடன் அதிகமாக இருப்பதால் அக்காவிற்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே அப்பா சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என்று உருக்கமாக எழுதியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.