மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் காதலியை பிரிந்த பப்லு ப்ரிவிராஜ்? வெளியான தகவல்.!
தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக வளம் வந்தவர் பப்லு என்றழைக்கப்படும் பிரித்திவிராஜ். இவர் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடித்த அவள் வருவாளா, கார்த்தியுடன் பொன்னுமணி போன்ற படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் ரசிக்கும்படியாக உள்ளது.
இதனிடையே பட வாய்ப்புகள் குறைந்ததால் ஒரு சில கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனையடுத்து சின்னத்திரையில் கால் தடம் பதித்து பல சீரியல்களில் நடித்து வந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்து வந்த கண்ணான கண்ணே சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது 57 வயதாகும் பப்லு ப்ரிவிராஜ், 27 வயது மலேசிய இளம்பெண் ஒருவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து இருவரும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பிரித்திவிராஜ் தனது இளம் வயது காதலியை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்த இளம்பெண் ஒருவரிடம் தனது காதலை முறித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.